Achcham Ennadi Naanam Song Lyrics Kaalam Maari Pochu Tamil Movie Lyrics

Achcham Ennadi Naanam Song Lyrics Kaalam Maari Pochu Tamil Movie Lyrics

Achcham Ennadi Naanam Tamil Song Lyrics

Achcham Ennadi Naanam The song is sung by K.S.Chitra from the Tamil film of Kaalam Maari Pochu. The movie stars Pandiiarajan in the lead role. “Achcham Ennadi Naanam” is composed by deva, with lyrics written by Vali.

Album
Achcham Ennadi Naanam
Sung By
K.S.Chitra
Music
deva
Lyrics
Vali

Achcham Ennadi Naanam Song Lines (Lyrics) In Tamil & English:

பெண் : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பெண் : பல்கலைகழக் தேர்விலே எங்கள்
பெண்களே பெரிதும் முன்னணி
என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே

ராணுவம் காவல் துறையிலே பெண்கள்
ஏகமாய் வந்து சேர்ந்த பின் ஆண்கள்
ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே

பாரத மாதா பெண்தானே
பாயும் நதியும் பெண்தானே
இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில்
நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும்

குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பெண் : நெஞ்சிலே ஆணை சுமந்தவள்
கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள்
சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள்

கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின்
சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின்
மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள்

பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள்
முட்டாளுக்கும் கருணை காட்டுவாள்
அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால்
அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள்

பெண் : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி….

Leave a Comment