Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Tamil Movie Lyrics

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Tamil Movie Lyrics

Kanmani Kanmani Minnidum Tamil Song Lyrics

Kanmani Kanmani Minnidum The song is sung by Mano, K.S.Chitra from the Tamil film of Sathyavan. The movie stars Murali in the lead role. “Kanmani Kanmani Minnidum” is composed by Ilayaraja, with lyrics written by Vali.

Album
Kanmani Kanmani Minnidum
Sung By
Mano, K.S.Chitra
Music
Ilayaraja
Lyrics
Vali

Kanmani Kanmani Minnidum Song Lines (Lyrics) In Tamil & English:

கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே

ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி
மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி
விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை…( கண்மணி )

ஆடையில் மூடி வைத்த அட்சய பாத்திரம்
நான் தொடும் வேளை எல்லாம் தேன் துளி வார்த்திடும்
தேன் துளி நான் கொடுத்தால் தீர்ந்திடும் ஆத்திரம்
வேகமாய் நீ எடுத்தால் வாடுமே பூச்சரம்

காவிரி ஓடி வந்து கல்லணை சேர்ந்ததா
மோகனம் பாடி வந்து மார்பினில் சாய்ந்ததா
கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே….

நூலிடை நீ படிக்கும் நூலகம் ஆனது
நால் வகை நாணம் எல்லாம் நீங்கியே போனது
பார்வைகள் பாய் விரித்து பல்லவி பாடுது
வேர்வைகள் தேகம் எங்கும் வெள்ளமாய் ஓடுது

காதலில் நீ அறிந்த சோதனை ஆயிரம்
சோதனை யாவும் இங்கு சாதனை ஆகிடும்
ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஹ்

கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே..

ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி
மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி
விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை…( கண்மணி )

Leave a Comment