Margazhi Maasathu Malligai Tamil Song Lyrics
Margazhi Maasathu Malligai The song is sung by SP. Balasubramaniam, Mano, Swarnalatha, Sujatha, Unni Krishnan from the Tamil film of Suyamvaram. The movie stars Prabhu, Prabhudeva, Karthik Parthiban in the lead role. “Margazhi Maasathu Malligai” is composed by S.A.Raj Kumar, with lyrics written by Palani Bharathi.
Album |
Margazhi Maasathu Malligai |
Sung By |
SP. Balasubramaniam, Mano, Swarnalatha, Sujatha, Unni Krishnan |
Music |
S.A.Raj Kumar |
Lyrics |
Palani Bharathi |
Margazhi Maasathu Malligai Song Lines (Lyrics) In Tamil & English:
ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி
முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல போடுது சாத்துக்குடி
பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி
தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி
திருமணம் நிலவில வச்சுக்கடி
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி…தினாக்குதின..
குழு : சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே
ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே எங்கும் நம் பேச்சு
தேதி பார்த்து நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு
பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா
வானவில்லை தூக்கி வந்து தோரணம் போட்டாச்சா
ஆண் : கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா
கச்சேரி கேட்பதற்கே நாம் கிளின்டனை அழைப்போமா
நேற்று உன்னை பார்த்த பார்வைகள் நேர்மையானது
பெண் : இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது
ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்
பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..ஹே ஹேய்…
பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பொண்ணு வரவேணும்
ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை என்றால் பாரதி வரவேணும்
காலை மாலை காதல் கடலில் மூழ்கி பார்ப்போமா
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே முத்தமும் கொடுப்போமா
பெண் : கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது
பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது
சிங்கம் போல வந்து நின்று சேர்த்துக்கோ பாவா
ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது
பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..
பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு கோட்டைய புடிச்சாச்சு
ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர் எல்லாம் மீசைய எடுத்தாச்சு
காதல் ரதமே நாளை தினமே ஊரில் வலம் வருமே
பெண் : எங்கள் தவமே தந்த வரமே ஒன்பது சுயம்வரமே
ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு அனுமதி கேட்டாச்சா
பெண் : அரசாங்க வாசலில் காதல் அனுமதி கேட்பதில்லை
ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில் காவல் நானிருப்பேன்
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில் சிறை இருப்பேன்
ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி ஹே ஹேய் ஹேய்
ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி
ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல போடுது சாத்துக்குடி
ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி
பெண் : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி
ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி
லாலலலாலா லாலலலலாலா…..லாலலலாலா….