Pethu Eduthavathan Ennaiyum Song Lyrics Velaikkaran Tamil Movie Lyrics

Pethu Eduthavathan Ennaiyum Song Lyrics Velaikkaran Tamil Movie Lyrics

Pethu Eduthavathan Ennaiyum Tamil Song Lyrics

Pethu Eduthavathan Ennaiyum The song is sung by Malasiya Vasudevan from the Tamil film of Velaikkaran. The movie stars Rajinikanth in the lead role. “Pethu Eduthavathan Ennaiyum” is composed by Ilayaraja, with lyrics written by Mu.Metha.

Album
Pethu Eduthavathan Ennaiyum
Sung By
Malasiya Vasudevan
Music
Ilayaraja
Lyrics
Mu.Metha

Pethu Eduthavathan Ennaiyum Song Lines (Lyrics) In Tamil & English:

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியை கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க
பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது
முறிஞ்சு போன வில்லாச்சு….(பெத்து)

வயிற்றுல வளர்த்த புள்ள
வந்து நிக்க வாசலில்லை
மடியிலே வளர்ந்ததுக்கு
இங்கிருந்த ஆசையில்லை

மகனா பொறந்ததுக்கு
தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள
துள்ளுறது நியாயமில்லை

தொட்டிலில் நாம் கிடந்தா
சோகம் வந்து சேர்வதில்லை
தோளிலே வாழும் வரை
துன்பமுன்னு ஒண்ணுமில்லை

கட்டில் பார்த்த பின்னே
காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு
போவதுக்கு தோணி இல்லை

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட
பெத்து எடுத்தவதான் என்னையும்…….

தலையில் வகிடெடுத்த
தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதி வைச்ச
அந்த விரல் பார்த்தேனா

கிளியை வளர்த்தெடுத்தா
கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா
பாசமுன்னு பார்க்காது

சொல்லத்தான் வார்த்தையின்றி
தாய் மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி
ஓர் மனசு வாடுமிங்கே

சொல்லிலே வேலெடுத்து
வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா
மாறிவிடும் யாவும் இங்கே

ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே
காட்டுங்க எங்க தாய்போல….(பெத்து)

Leave a Comment